Test
Posted On Tuesday, March 8, 2011 at at Tuesday, March 08, 2011 by Ram SubramanianTest
என்று முடியும் இந்த நாடோடி வாழ்க்கை...
Posted On Tuesday, May 25, 2010 at at Tuesday, May 25, 2010 by Ram Subramanianபடிக்க ஒரு ஊர்...
வேலைக்கு என்று பல ஊர்...
எத்தனை ஊர்கள் கண்டு களித்தாலும்
சொந்த ஊரின் பாதுகாப்பு கிடைக்குமா ...
எத்தனை வித உணவுகள் கிடைத்தாலும்
அம்மா செய்யும் வத்தைக்குழம்புக்கு ஈடாகுமா ...
எத்தனை நண்பர்கள் வாய்த்தாலும்
சிறுவயதில் பூத்த நட்புபோல் வருமா ...
எத்தனை வசதிகள் வந்தாலும்
பெற்றோருடன் இருத்தல் போல் ஆகுமா ...
என்று முடியும் இந்த நாடோடி வாழ்க்கை...
எங்கள் ஊர் திருவிழா…
Posted On Sunday, January 3, 2010 at at Sunday, January 03, 2010 by Ram Subramanianஎங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி. பெருமையா சொல்லிக்கணும்னா திரு. கமல்ஹாசனின் சொந்த ஊர். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோரும் சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. எங்கள் ஊரும் வைகை ஆற்றுப்படுகையில் இருப்பதாலும், வைகை ஆற்றங்கரையில் பெருமாள் கோவில் இருப்பதாலும் அந்த வைபவம் இங்கும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். மதுரையம்பதி நகரம் ஆகி விட்டதால், சில நடைமுறை சிக்கல்களால் அவர்கள் செய்யாமல் விடும் சுவாரிசியமான சில சம்பிரதாயங்களை எங்கள் ஊர் திருவிழாவில் காண முடியும். அதில் முக்கியமானது, பெருமாள் கோவிலை விட்டு வெளியேரும் காட்சி. அதை சொற்களால் வர்ணிக்க இயலாது. அதனால் அந்த video-வை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். கண்டு மகிழுங்கள்… ஆடி வரார், ஓடி வரார், அழகழகாய் நடந்து வரார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Posted On Thursday, December 31, 2009 at at Thursday, December 31, 2009 by Ram Subramanianஇன்னும் சிறிது நேரத்தில் 2010 ஆண்டு தொடங்கப் போகிறது.
இந்தப் பதிவின் மூலம் என் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
நன்றி.
Expense Organizer v2.0
Posted On at at Thursday, December 31, 2009 by Ram Subramanianசில பக் (bug) சரி செய்யப்பட்டு இந்த மென்பொருளின் மறுபதிப்பை வெளியிட்டுள்ளேன். நண்பர்கள் உபயோகப்படுத்திவிட்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.


